Apr 25, 2011

சாய்பாபா கல்விப் பணிகள்!


காலங்களை தாண்டி நிற்கும் சாய்பாபா கல்விப் பணிகள்!

கல்வித் துறையில் சத்ய சாய்பாபா செய்த மிகப் பெரிய சேவை காலங்களைக் கடந்தும் அவர் பெயரைப் பறை சாற்றக் கூடியவை.

1954-ல் ஸ்ரீசத்யசாய் பல்கலைக்கழகத்தை புட்டபர்த்தியில் ஆரம்பித்த சாய்பாபா,இதன் வேந்தராக இருந்தார்.

இந்தப் பல்கலைக் கழகம் பின்னர் பெங்களூர் மற்றும் அனந்தப்பூரிலும் கிளைகளைப் பரப்பி பல்லாயிரம் மாணவர்களுக்கு இலவசக் கல்வியை அளித்தது.

சத்யசாய் பல்கலைக்கழகத்தில் அனைத்துத் துறையிலும் உயர்கல்வி படிக்க முடியும். இந்தியாவில் மத்திய அரசின் நாக் (National Assessment and Accreditation Council) கமிட்டியால் ஏ++ சான்றிதழ் தரப்பட்ட ஒரே கல்வி மையம் சத்ய சாய் பல்கலைக் கழகம்தான்.

160 நாடுகளுக்கும் மேல் சாய்பாபாவின் அறக்கட்டளை மூலம் கல்விப் பணிகள் நடந்துவருகின்றன. இங்கெல்லாம் சத்யசாய் பல்கலைக் கழகத்தின் படிப்பு மையங்களும் தொடர்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

படிப்போடு சேர்த்து நன்னடத்தை குறித்த கல்வியையும் இந்த நிறுவனங்களில் கற்பிக்கப்படுகிறது.

பள்ளிகள்...

சாய்பாபாவின் Educare திட்டம் மூலம் உலகம் முழுக்க பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுவரை ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, இங்கிலாந்து, பெரு, ஜாம்பியா உள்ளிட்ட 33 நாடுகளில் இத்தகைய பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கனடாவில் உள்ள பள்ளிகளில் மிகச் சிறந்தது என சாய்பாபா பள்ளியை பட்டியலிட்டுள்ளது அந்நாட்டின் பிரேஸர் கல்வி நிறுவனம். பிரேஸர் கல்வி நிறுவன தகுதி ரேங்கில் 10-க்கு 10 மதிப்பெண்களைப் பெற்றது சாய் பாபா பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

இசைக்கென்றே சர்வதேசத் தரத்தில் ஸ்ரீசத்யசாய் மிர்புரி இசைக் கல்லூரியையும் பாபா ஏற்படுத்தியுள்ளார்.

மருத்துவக் கல்வி... சேவைகள்

அனைத்து அடிப்படை கல்வி மற்றும் உயர் படிப்புகளும் இலவசமாகவே தரப்படுகின்றன. புட்டபர்த்தியில் சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புட்டபர்த்தியில் உள்ள இந்த மருத்துவமனை 220 படுகைகளுடன்கொண்டது. அனைத்து சிகிச்சைகளும் (இதய அறுவை சிகிச்சை உள்பட) இலவசம்.

பெங்களூர் ஒயிட்பீல்டில் 200 ஏக்கரில் பரந்து விரிந்த இந்த மருத்துவமனையில் 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. கிட்டத்தட்ட 2.5 லட்சம் நோயாளிகளுக்கு இலவச மருத்துவசேவை அளித்து வருகின்றன இந்த மருத்துவமனைகள்.

பெங்களூர் ஒயிட்பீல்டில் மட்டும் 20 லட்சம் நோயாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

சிகிச்சை மட்டுமின்றி, உடைகள், உணவு என பல வசதிகளும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

இந்த சிறப்பு மருத்துவமனைகள் தவிர, இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் கண் மருத்துவமனை, காது மூக்கு தொண்டை மருத்துவமனை என ஏராளமான மருத்துவமனைகளை அமைத்துள்ளார் சாய் பாபா.

0 comments:

Post a Comment