தமிழக மீனவர் உயி(ர்)ரை விட சிறிலங்க அரசின் நட்பு பெரியது - இந்திய அரசு !
இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் நடுக்கடலில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், “மீனவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
“4 தமிழக மீனவர்கள் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஒரு மீனவரின் உடல் யாழ்ப்பாணத்தில் (நெடுந்தீவில்) கரை ஒதுங்கியுள்ளது. இதனால் யாழ்ப்பாணத்தில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கை முடிவிற்காக காத்திருக்கிறோம். இதுவரை போதிய தகவல்கள் கிடைக்கவில்லை, மேற்கொண்டு தகவல்கள் கிடைக்குமா என்பதை அறிய தமிழக அரசின் தலைமை செயலருடன் பேசியுள்ளேன். அவர்களின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” என்றும் நிருபமா ராவ் கூறியுள்ளார்.
நிருபமா ராவின் வார்த்தைகளை தொலைக்காட்சியில் பார்த்தவர்களும், நாளிதழ்களில் படிப்பவர்களும் அவர் மிக அக்கறையுடன் பேசுகிறார் என்றே முடிவு செய்வார்கள். ஆனால், அவருடைய வார்த்தைகளை ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே, எவ்வளவு லாவகமாக அவர் பிரச்சனையை இழுத்தடிக்கும் உத்தியை கையாள்கிறார் என்பது புரியும்.
இராமேஸ்வரம் மீனவர்கள் காணாமல் போனது குறித்து புகார் செய்யப்பட்டபோது, அவர்களைத் தேட மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கவில்லை. அவர்களில் ஒரு மீனவர் உடல் 4 நாட்ளுக்குப் பிறகு இலங்கையை அடுத்த நெடுந்தீவு பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த உடலில் வெளியிலும் உட்பகுதியிலும் காயங்கள் இருந்தன. விக்டர்ஸ் என்ற அந்த மீனவர் சித்தரவதை செய்து கொல்லப்பட்டார் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது.

அதன் பிறகு கரை ஒதுங்கிய மீனவர்கள் உடல்களிலும் காயங்கள் இருந்தன. ஒரு மீனவரின் ஒரு கை துண்டிக்கப்பட்டிருந்தது. ஆக, அவர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று அப்படமாக தெரிகிறது. ஆனால், நிருபமா என்ன கூறுகிறார் என்று பாருங்கள்; “4 மீனவர்களின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை” என்று கூறுகிறார்.
டெட் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார், கில்ட் என்றே சொல்லியிருக்க வேண்டும். அதற்கான ஐயத்திடகிடமற்ற ஆதாரங்கள் கரை ஒதுங்கிய உடல்களில் இருந்தது. ஆனால், டெட் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். டெட் என்றால்தான் துரதிருஷ்டவசமானது என்ற வார்த்தை பொருந்தும், சித்தரவதை என்றால் அந்த வார்த்தை பொருந்ததாது அல்லவா?
இது ஒரு துருதிருஷ்டவசமான சம்பவம் அல்ல, மாறாக, திட்டமிட்ட படுகொலை. இதையே ஒப்புக்கொள்ளாமல் வார்த்தைகளால் மறைக்கிறது டெல்லி!
இந்த மீனவர்கள் 4 பேரும் கொல்லப்பட்டது இலங்கை கடற்பகுதியில் என்பது மீனவர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சிறிலங்க அரசிடம் விளக்கம் கேட்போம் என்று...

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் செய்கிறார்கள். சிறிலங்க கடற்படை சுட்டுக்கொன்றது என்று மீனவர்கள் கூறினால், அந்தப் பகுதியில் அந்த நேரத்தில் சிறிலங்க கடற்படை படகுகளோ அல்லது கப்பல்களோ செல்லவில்லை என்றுதான் ஒவ்வொரு முறையும் சிறிலங்க அரசு கூறுகிறது. பிறகு, அந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து புலனாய்வு செய்யப்படும் என்று சிறிலங்க அரசு இந்தியாவிற்குத் தெரிவிக்கும். அதை இந்தியாவும் ஏற்றுக்கொள்ளும். அத்தோடு முடிந்தது. அதற்குப் பிறகு மற்றொரு மீனவர் கொல்லப்படுவார், அதற்கு இதே வியாக்யானம் சொல்லப்படும். இந்த அரசின் அயலுறவுச் செயலரும் புன்னகை பூத்த முகத்துடன் அதனை ஏற்றுக்கொள்வார்.
கழுத்தில் சுறுக்குப்போட்டு, கடல் நீரில் இழுத்து ஜெயக்குமார் என்ற மீனவரை சிறிலங்க கடற்படையினர் கொன்றார்களே, அதற்கு இதுநாள்வரை சிறிலங்க அரசு விளக்கம் ஏதும் தந்துள்ளதா? அதற்கு முன்னர் வீரபாண்டியன் என்ற மீனவர் கொல்லப்பட்டாரே அதற்கு காரணமானவர்கள் யார் என்று கண்டுபிடித்துக் கூறினார்களா?
எந்த விளக்கமும் தரப்படவில்லை. ஒருமுறை கூட, தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு சிறிலங்க அரசு பொறுப்பேற்கவில்லை. இந்திய அரசும் அதனை ஏன் என்று கேட்கவில்லை. ஜெயக்குமார்
கொல்லப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில் எழுந்த கொந்தளிப்பினால் கொழும்பு சென்ற நிருபமா, அந்நாட்டு அயலுறவு செயலருடன் இணைந்து விடுத்த கூட்டறிக்கையில் கூட ‘அது குறித்து விசாரிக்கப்படும்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே ஒருபோதும் சிறிலங்க அரசு பொறுப்பேற்கவில்லை. இந்தியாவும் வற்புறுத்தவில்லை. அதனால்தான் மீனவர்கள் படுகொலை தொடர்கதையாகிறது.
தங்கள் கண் முன்னால் சக மீனவர்கள் சுடப்படுவதை பார்த்துவிட்டு, கரை திரும்பிய மீனவர்கள் புகார் மனு அளித்தபோதே கண்டுகொள்ளாத டெல்லி, ஒரு படகில் சென்ற 4 மீனவர்களும் சாட்சிகளின்றி கொல்லப்பட்டதற்கா விளக்கம் கேட்கப்போகிறது?
செத்த மீனவரின் குடும்பத்திற்கு ‘உடனடியாக’ ரூ.5 இலட்சம் கொடுத்து தனது மனிதாபிமானப் பணியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் முடித்துக்கொள்கிறார். அந்தச் ‘சம்பவம்’ எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று சொல்வதுடன் மத்திய அரசின் பொறுப்பு முடிந்துவிடுகிறது. மீனவர் படுகொலை மட்டும் தொடர்கதையாகத் தொடர்கிறது.
ஏனென்றால், தமிழ் மீனவனின் உயிரை விட இந்திய அரசுக்கு சிறிலங்க அரசின் நட்பு பெரியது.
FVG
0 comments:
Post a Comment