Jan 22, 2011
Jan 21, 2011
உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன் !!!!!!!!!!!!!
நண்பர்களே இந்தக் 7 கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........முடிஞ்சுது
1)அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?
2)ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?
3)மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா sms அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா??
4)ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?
5)அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?
6)"உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.
7)நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?
FEW ANCIENT KINGS OF TAMIL NADU
First PANDYA Kings
590 - 620 kadungkon
620 - 645 Maravarman- Avani Soolamani
645 - 670 Arikesari Parangkusan
700 - 730 Kochadaiyan Ranatheeran
730 - 765 Maravarman Rajasimman I
765 - 815 Parantaka Nedunchadayan
815 - 835 Varagunan I
835 - 862 Seemara Seevallapan
862 - 880 Varagunan II
885 - 895 Parantaka Veera Narayanan
905 - 920 Rajasimman II
........... Veerapandiyan
1190 - 1216 Sadaiyavarman kulasekaran
1216 - 1238 Maravarman Sundarapandiyan I
1238 - 1251 Maravarman Sundarapandiyan II
1268 - 1271 Sadaiyavarman Sundarapandiyan I
1253 - 1274 Sadaiyavarman Veerapandiyan
1268 - 1310 Maravarma Kulasekara Pandiyan
Later PALLAVAS
......... . Simmavarman III
575 – 610 Simma vishnuvarman
610 - 630 Mahendiravarman I
630 - 668 Narasimmavarman I
668 - 669 Narasimmavarman II
669 - 690 Parameswaravarman I
690 -728 Narasimmavarman II
729 - 731 Parameswaran II
731 - 796 Nandivarman II
796 - 846 Nandivarman
846 - 869 Nandivarman III
869 - 913 Nirupathungavarman
......... . Aparajitavarman
CHOZA kings
907 - 990 Parantaka Chozan I
956 - 957 Kandarathitan
956 - 957 Arinjiya Chozan
........ . Uttama Chozan
........ . Sundara Chozan
985 - 1014 Rajarajan I
1012 - 1044 Rajendiran I
1070 - 1120 Kulothungan I
1118 - 1132 Vikkirama Chozan
1133 - 1150 Kulottungan II
1150 - 1163 Rajarajan II
1163 - 1179 Rajarajan III
1179 - 1216 Kulottungan III
Mohammadian Kings
1296 -1315 Allauddin kilji - Mallikkapur
1317 Mubaarak shah - kusrukhan
1323 Kiyasuddin Tughlak
Sultans of Madurai (1338 – 1378)
....... Jallaludin Asanshah
.. .... Kudhpudin
... ... Kiyasuddin
1341 - 1356 Nazeeruddin
1356 - 1361 Adillshah
1361 - 1370 Bakrutin Mubarak shah
1370 - 1377 Alavudin Sikkanadar
1336 - 1565 Vijayanakar Kings
1336 – 1672 Sankagama vamsam /dynasty
1321 - 1339 Ekambara Nathar
………….... Hariharar Pukkar
1485 – 1505 Sajava vamsam /dynasty
1505 - 1615 Tuluva vamsam /dynasty
1565 - 1672 Araveedu vamsam /dynasty
மதுரை நாயக்கர்கள் / NAYAKKARS of Madurai
. . . . . . Namaga Nayakkar
1529 - 1564 Visvanatha Nayakkar
1564 - 1572 Krishnappa Nayakkar I
1572 - 1595 Veerappa Nayakkar
1595 - 1601 Krishnappa Nayakkar II
1601 - 1609 Muthu krishnappa Nayakkar
1609 - 1623 Muthu Veerappa Nayakkar
1623 - 1659 Tirumalai Nayakkar
1659.. Muthu Veerappa Nayakkar II
1659 - 1682 Chokkanatha Nayakkar
1682 - 1689 Muthu Veerappa Nayakkar III
1689 - 1706 Rani Mangammal
1706 - 1732 Vijayaranga Chokka Natha Nayakkar
தஞ்சை நாயக்கர்கள் /NAYAKKARS of Tanjore
1532 - 1560 Sevvappa Nayakkar
1560 - 1600 Acchutappa Nayakkar
1600 - 1632 Ragunatha Nayakkar
1633 - 1673 Vijayaraghava Nayakkar
செஞ்சி நாயக்கர்கள் / NAYYAKARS of Gingee
1526 - 1541 Vaiyappa Nayakkar
1541 - 1544 Petha krishnappa Nayakkar
1541 - 1567 Soorappa Nayakkar
1567 - 1575 Krishnappa Nayakkar I
1580 - 1593 Vaiyappa krishnappa kondama Nayakkar
........... krishnappa Nayakkar II
இராமநாதபுரம் சேதுபதிகள் / SETHUPATIS of RAMANATHAPURAM
1605 - 1622 Sadaikkathevar
1622 - 1636 Koothan Sethupathi
1636 - 1645 Sadaikkathevar II
1645 - 1670 Raghunatha Sethupathi
....... Suriya Thevar,Anthana Thevar
........... Raghunatha Thevar (Kezhavan Sethupathi)
1700 - 1720 Vijayaraghunatha Sethupati
........... Bhavani Sankara Thevar Sethupathi
1720 – 1803 Kattappa Thevar,
........... Sivakumara Muthu,
........... Vijaya Raghunatha Thevar
........... Ranjath Thevar , Sellath Thevar ,
........... Muthu Ramalinga Thevar,
........... Mangaleswara Nachiyar , Annasami Thevar
தஞ்சை மராட்டியர்கள் / MARATTIYARS of Tanjore
1675 - 1684 Vengkoji
1694 - 1712 Shaji
1712 - 1728 Serfoji
1728 - 1736 Tukhoji
1737....... Baba Saheb, Kattu Raja (Shaji)i
1738....... Saiyaji
1739 - 1763 Prathap Singh
1763 - 1787 Tulajajji
1787 - 1798 Amar singh
1798 - 1833 Serfoji II
1833 - 1855 Sivaji
புதுக்கோட்டை தொண்டைமான்கள் / THONTAIMANS of PUDUKOTTAI
1730 - 1769 Vijaya Raghunatha Thondaiman
1769 - 1789 Raya Raghunatha Thondaiman
1807 - 1825 Raja Vijaya Raghu Natha Raya Thondaiman
1825 - 1839 Raja Raghunatha Thondaiman Bahadur
1839 - 1886 Raja Ramachandra Thondaiman Bahadur
1886 - 1928 Marthanda Bairavath Thondaiman Bahadur
1928 - 1948 Raja Raja Gopala Thondaiman

Jan 20, 2011
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்களைக் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
தொப்புள் கொடியில்
பலமுறை தீப்பிடிக்கும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்களா?
ஒரணியில் திரண்டு
ஒரே முடிவு எடுப்பீர்களா?
உங்கள் அரசியல் விளையாட்டில்
எங்களைத் தோற்கடிக்காதீர்கள்!
எந்த இனத்தவனும் உங்களை
மன்னிக்கமாட்டான்
சொந்த இனத்தவனைக்
நீங்கள் காத்திட மறந்துவிட்டால்
வாயிலே நுழைவதெல்லாம்
உங்கள் வயிற்றிலே செரிக்காது
சொந்த சகோதரன்
அங்கே பட்டினியில் சாகும்போது
இந்த தாகம் இந்தச் சோகம்
இந்த இன அழிப்பு
இந்த பேர் இழப்பு
எல்லாம் தமிழனுக்கே
வாய்த்த தலைவிதியா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
குருதியில் அடிக்கடி
நீ குளிப்பாய்
பெற்ற பிள்ளையை
படுக்கையில் நீ இழப்பாய்
நித்திரையில் நிம்மதியே இருக்காது
மரநிழலில் மனம் குமுறும்
நரம்புகள் வெடிக்கும்
நா வறண்டு போகும்
பெண்களின் ஆடைகள் தூக்கி
பேய்கள் வெறி தீர்க்கும்
ரத்த ஆறு வழிந்தோடும்
நடுவிலே நாய் நக்கும்
தலையில் செல்வந்து விழும்
தட்டிவிட்டு வலியின் வதையோலம்
வானைப் பிளக்கும்
கண்ணீர்த் துளிகள் கடலாகும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
வீட்டுக்குள்ளே ஓடி ஓடியே
பதுங்கு குழிகளில் வாழ
உங்களால் முடியுமா?
அகோரத்தின் உச்சத்தை
உணர்ந்தது உண்டா?
அழுது களைத்து மீண்டும்
எழுந்து நின்றது உண்டா?
உன்னைப் புதைக்கும் இடத்தில்
உயிர் வாழப் பழகியதுண்டா?
உலகம் எங்கும் சிதறி
தாயைப் பிரிந்து வாழும்
துயரத்தை அனுபவிக்க முடியுமா?
பனிக் குளிரில் பனியோடு
பனியாய்க் கரைந்து
உங்களால் உறைய முடியுமா?
சவப் பெட்டிக்குள் உறங்கி
நாடு விட்டு நாடு போய்
நரகத்தில் தொலையமுடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
பாண் துண்டோடு பருப்பு
பகலில் வயிறு பசியாறும்
பாதி வயிற்றோடு நெருப்பு
இருளில் குளிர் காயும்
சிறைச்சாலைக்கும் திறந்தவெளிச்
சிறைச்சாலைக்கும்
ஒரே ஒரு பொருள்தான்
எங்கள் யாழ்ப்பாணம்!
பாலைவனத்து ஒட்டகமாய்
பாம்புகளுக்கு நடுவில்
எங்கள் வாழ்க்கை ஓடும்
ஊரின் பெயரோ மட்டக்களப்பு!
தாய்மண் தேகத்தை சுவைத்து
ஆட்டுக்கறியாக பங்கு போடும்
நவீன மிருகஙக்ளை
யார் வேட்டையாடுவது?
ஆண்ட பரம்பரையின்
அடையாளத்தை அழிக்கமுடியுமா?
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
ஆளும் கட்சிகள்
ஆட்சி இழந்தாலும்
அனைத்துக் கட்சிகள்
கூட்டம் நடந்தாலும்
தமிழகம் முழுவதும்
கடைகள் மூடப்பட்டாலும்
திரையுலகமும் திரண்டு
பேரணியில் சென்றாலும்
இலக்கியத் தோப்பினில்
எரிமலை எழுந்தாலும்
தனித் தனியாக நீங்கள்
உண்ணாவிரதம் இருந்தாலும்
எப்போதும் உங்களை
நெஞ்சிலே சுமக்கின்றோம்
தணியாத தாகமாய்
விடுதலை கேட்கிறோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
உங்கள் எழுச்சியால்
எங்கள் நெஞ்சு நிறைகிறோம்!
நீட்டியுள்ள நேசக்கரத்தை
உறுதியாய்ப் பற்றுகின்றோம்!
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!
வைரம்
தங்கத்தின் விலை ஏறி இறங்குவது போல வைரத்தின் விலையிலும் ஏற்றம் இறக்கம் இருக்கிறது.
இதன் விலைகளை கேரட்டின் அடிப்படையில் நிர்ணயிக்கிறார்கள்.
வைரத்தை சோதிப்பதற்கு இன்று பல கருவிகள் உள்ளன.சாதரன கல்லையும் வைரத்தையும் எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
சிலர் ராசிப்பார்த்து தான் கல்லை வாங்குவார்கள். வைரம் சிலருக்கு ராசி இல்லை என்று நம்புவார்கள்.இது அவரவர்களின் நம்பிக்கையை பொருத்த விசயம்.பிறந்த மாதங்களை வைத்து கற்களை தேர்வு செய்கிறார்கள்.
அசலான கல்கலுக்கு சில தன்மைகள் இருப்பதாக சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஆபிரிக்கா கனடா இந்தியா பிரேசில் ரஷ்யா ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரங்கள் கிடைக்கிறது.
ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26இ000 கிலோ கிராம்) வைரம் எடுக்கப்படுகிறது.
உலகத்திலேயே வைரக்கல் பட்டைத்தீட்டக் கூடிய பெரிய மையம் பெல்ஜியத்தில் இருக்கிறது.
நம் நாட்டில் மும்பை சூரத், ஹகமதாபாத், பஹவாங்கர் குஜராத்திலும் சிறு சிறு மையமாகவும் இருக்கிறது. இந்த தொழிலில் சுமார் பத்துலட்சம் பேர்கள் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் வைரத்தை வெட்டி அதிகமாக பட்டைத்தீட்டல் செய்து அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.
இன்று வளைகுடா நாடுகளில் இந்தியாவில் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களே அதிகமாக புலக்கத்தில் உள்ளது.
ஆனால் பெல்ஜியத்தில் பட்டைத்தீட்டப்பட்ட கல்லுகளுக்கு சந்தையில் தனித்துவம் கிடைக்கிறது. அதன் விலையிலும் மாறுதல் இருக்கிறது.
பெல்ஜிய மையத்தைப்பற்றி தமிழ் பண்பலையில் வெளியான செய்தியில்,
பெல்ஜியத்தின் அண்டவிப் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமாகும். உலக வைரக்கல் மையம் என்று அழைக்கப்படுவதால் அது மேலும் மக்களைக் கவர்கிறது.
உலகில் பத்து வைரக்கல்களில் 7 இந்த நகரில் பட்டை தீட்டப்படுகின்றன. என்று கூறப்படுகின்றது.
அண்டவிப் நகரின் மிக பெரிய வைரக்கல் கடையின் 1000 சதுர மீட்டர் பரப்புடைய காட்சி அறையில் வைரக்கல் பட்டை தீட்டப்படுவதை இலவசமாக பார்வையிடலாம்.
இந்த நகரில் தயாரிக்கப்பட்ட வைரக்கல் வரி விலக்கு என்ற சலுகையுடன் ஏற்றுமதி செய்யப்படலாம்.
அண்டவிப் நகரின் வைரக்கல் பட்டை தீட்டும் வெட்டு கலை உலகில் முதல் தரமுடையது. அங்குள்ள மக்கள் இதனால் பெருமைப்படுகிறார்கள். இந்தத் தீட்டும் வெட்டு முறை ஏற்கனவே 600 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகின்றது. பட்டை தீட்டப்பட்ட வைரக்கல் மேலே 33 பக்கங்களும் கீழே 24 பக்கங்களும் கொண்டுள்ளது. இந்த வடிவ வைரக்கல் மிகவும் ஒளிமயமானது.
இந்த வடிவம் உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பத்து கிராமுடைய ஒரு வைரக்கல் அண்டவிப் கலைஞர்களால் பட்டை தீட்டப்பட்ட பின் அதன் எடை 5 கிராம் மட்டும் இருக்கும். மற்ற 5 கிராம் எல்லாம் சிதறிவிடும்.
அண்டவிப் நகரில் உள்ள வைரக்கல் தெரு S வடிவில் உள்ளது. மொத்தம் 4 வைரக்கல் விற்பனை மையங்களில் 3 இந்த தெருவில் உள்ளன. 300 நிறுவனங்களின் வைரக்கல் விற்பனை மையத்தில் ஒரு மின்னணு சாவடியில் நுழைவு அட்டை காட்டிய பிறகு தான் நுழைய முடியும் என்று கூறுகிறது.
நாம் எதைவாங்கினாலும் அதைப்பற்றிய விபரங்களை கொஞ்சமாவது விளங்கிக் கொண்டு வாங்கினால் நாம் ஏமாற்றத்திலிருந்து காக்கப்படுகின்றோம்.
தெரிந்தவர்களிடம் கேட்கலாம் அல்லது இணையத்தில் தேடலாம்.
இன்றைய சூழலில் தங்கமும் வைரமும் விலையில் பெரும் ஏற்றத்தைக் கண்டுள்ளதால் அவைகளில் நாம் கொடுக்கக் கூடிய பணத்திற்கான மதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி படுத்திக் கொண்டு வாங்குவது சிறந்தது.
ஏமாற்றக் கூடியவர்கள் அதிகம் இருப்பதால் ஏமாறுபவர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள்.
ஆதலால் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நம் பணத்தையும் தரத்தையும் இழந்திடாமல் காப்பாற்றலாம்.
FVG
Friends V Guide
Jan 15, 2011
கலைப்போராளி சீமான்
அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ஏன்?
வியூகத்தை விளக்கும் சீமான்
ஒரு புலியும் ஒரு புலியும் சந்தித்தால்...’ - வைகோவின் அலுவலகம் சென்று சீமான் சந்தித்ததைப் பற்றி ஊடக உலகத்தில் இப்படித்தான் பேசிக்கொள்கிறார்கள்.
தமிழர் தாயகத்துக்காக போராடி வரும் வைகோவும், சீமானும் ஜனவரி 10-ம் தேதி ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் சந்தித்துக் கொண்டனர்.
இந்த சந்திப்புக்குப் பின்... வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு கேட்கப் போவதாக அறிவித்திருக்கிறார் சீமான். விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் அ.தி.மு.க.வை மீண்டும் சீமான் ஆதரிப்பது பற்றி தமிழ்நாட்டு அரசியலில் சலசலப்புகள் முளைத்திருக்கும் நிலையில், சீமானிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.
வைகோவுடனான சந்திப்பு பற்றி...
நான் தமிழக அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் இருந்தபோது... அய்யா நெடுமாறனுடன் என்னை சந்தித்து தைரியம் கூட்டியவர் அண்ணன் வைகோ. நான் விடுதலை செய்யப்படவேண்டும் என்று மனதார விரும்பியவர். என் விடுதலைக்காக பல கூட்டங்களில் முழங்கியவர். இது மரியாதை நிமித்தமான, அன்பு நிமித்தமான அண்ணன்-தம்பி சந்திப்பு.
என் விடுதலையை விரும்பிய பழ. நெடுமாறன் அய்யா, அண்ணன் திருமாவளவன், என்னுடைய வழக்குரைஞர்கள் ஆகியோரையும் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளேன். இது எல்லாமே அரசியலைத் தாண்டிய பண்பாட்டுத் தளத்தின் அடிப்படையிலான பாச சந்திப்புகள்தான்.
இரட்டை இலைக்கு ஆதரவு கேட்பேன் என சொல்லியிருக்கிறீர்களே?
எங்களுடைய நோக்கம் தமிழகத்தில் அடுத்து ஆட்சிக்கு யார் வரவேண்டும் என்பதல்ல... யார் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதுதான். தமிழகத்தில் ஆயிரம் மக்கள் பிரச்னைகளையும் ஈழத்தில் லட்சக்கணக்கான எம் உறவுகள் நொடிக்கு நொடி சுட்டு வீழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த-போதும் பதவி சுகத்துக்காக அவற்றையெல்லாம் அவதானிக்காமல் விட்டது தி.மு.க.
போர் நடத்தியது காங்கிரஸ்... அதை பின்புறம் நின்று ஆதரித்து, ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் துரோகம் செய்தது தி.மு.க. இந்த நிலையில்... பதவி சுகத்துக்காக லட்சக்கணக்கான உயிர்களை காவு கொடுத்த காங்கிரஸையும், கலைஞரையும் மீண்டும் அந்த பதவி சுகத்தை அனுபவிக்கவே விடக்கூடாது.
ஒருவேளை தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால்... ‘ஈழத்தில் போரா? அப்படியொன்று நடக்கவே இல்லை. அங்கே தமிழர்கள் நன்றாக இருக்கிறார்கள். இலவச திட்டங்களை தமிழக மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்’ என்று ஊடகச் சர்வாதிகாரம் மூலம் உண்மையை மறைத்து... ஈழ விவகாரத்தின் சுவடே தமிழ்நாட்டில் இல்லாமல் செய்துவிடுவார்கள். இப்படிப்பட்டவர்கள் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வரக்கூடாது.
என் இனத்தையே அழித்த காங்கிரஸ் கட்சியை நான் என் தாய்மண்ணிலிருந்து அழிக்கவேண்டும். அதனால்தான் காங்கிரஸுக்கு எதிரான வலிமை மிக்க அணியை ஆதரிக்கிறோம்... காங்கிரஸை அழிப்பது என்பது தந்தை பெரியாரின் கனவு, அண்ணல் அம்பேத்கரின் கனவு, ஐயா முத்துராமலிங்கத் தேவரின் கனவு.
நேற்றுவரை காங்கிரஸ் கூட்டணிக்காக பகிரங்கமாக முயற்சி செய்தவர் ஜெயலலிதா. இந்நிலையில், இனியும் காங்கிரசுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என நம்புகிறீர்களா?
இதில் எனக்கு என்ன பிரச்னை? காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், அ.தி.மு.க.வையும் எதிர்த்துதான் முழங்குவான் இந்த சீமான். என் பொது எதிரி காங்கிரஸ். அதோடு, யார் சேர்ந்தாலும் எதிர்ப்போம். இதில் குழப்பமே இல்லையே... காங்கிரஸுக்கு எதிராக இரட்டை இலை இல்லை... வேறு எந்த இலை நின்றாலும் ஆதரிப்பேன். இன்றுவரை அ.தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இல்லை.
இன்று நாங்கள் சுபாஷ் சந்திரபோஸின் நிலையில் இருக்கிறோம். நாடு விடுதலை அடையவேண்டும். ஆனால், அதற்கான யுத்தம் நடத்துவதற்காக போதுமான வலிமை சந்திரபோஸிடம் இல்லை. அதற்காக அவர் வெள்ளையனை எதிர்க்கும் வெளிநாட்டு ராணுவத்தின் உதவியை நாடினார்.
எங்களுக்கு இப்போது அரசியல் களத்தில் தனியாக நின்று யுத்தம் நடத்துவதற்கான வலிமை இல்லை. அதற்காக யுத்தத்திலிருந்து ஒதுங்கிக் கொள்கிற கோழைகள் அல்ல நாங்கள். நாட்டு விடுதலைக்கான யுத்தத்தில்... என் எதிரியை யார் எதிர்க்கிறார்களோ, அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களோடு இணைந்து போராடுவதுதான் எங்கள் நிலைப்பாடு.
இதற்காக ஜெயலலிதா மனிதப் புனிதவதி என்றோ, சொர்க்கத்தின் ஆட்சியை தரப்போகிறார் என்றோ, நான் போற்றிப் புகழப் போவதில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோத போக்கில் செயல்பட்டால், எதிர்த்து முழங்கும் முதல் ஆளாக சீமான்தான் இருப்பான்.
இலைக்கு ஆதரவளிக்க வேண்டாம் என என்னைக் கேட்டுக்கொள்ளும் நண்பர்கள்... வேறு என்ன செய்யலாம் என்று எனக்கு யோசனை சொல்லலாமே? தேர்தல் வரைக்கும் எங்கேயாவது வெளியூர் செல்லச் சொல்கிறார்களா? ‘பகலவன்’ படத்தை இப்போதே ஆரம்பித்து படப்பிடிப்பு நடத்து என்று சொல்லப் போகிறார்களா?
சிறை மீண்ட பின் தமிழக அரசின் மீது வழக்குத் தொடுப்பதாக சொல்லியிருந்தீர்களே?
‘‘ஆம். அதற்கான ஆயத்தப் பணிகளில் இருக்கிறோம். நான் சிறையிலிருந்தது சட்டவிரோதம் என்று ஆனபிறகு, அந்த சட்டமீறலை செய்த தமிழக அரசு தண்டிக்கப்பட்டாக வேண்டும்.
தவிர, சிறையிலிருந்து வெளிவந்த பின்னும் எனக்கு வாய்ப்பூட்டு சட்டம் போட்டிருக்கிறது தமிழக அரசு. சீமான் எங்கே பேசச் சென்றாலும், அனுமதி மறுக்கப்படுகிறது. மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து நடக்க இருந்த உண்ணாவிரதத்தில் நான் கலந்துகொள்கிறேன் என்று தகவல் கிடைத்ததும், உண்ணாவிரதத்துக்கே அனுமதி மறுத்துவிட்டனர்.
நெய்வேலியில் என்னுடைய பொதுக் கூட்டத்துக்காக அனுமதி கேட்டபோது... ‘சீமான் நெய்வேலியில் பேசினால், மின் உற்பத்தி பாதிக்கப்படும்’ என்று அனுமதி மறுப்புக்கு காரணத்தை எழுதிக் கொடுத்திருக்கிறது காவல்துறை. இந்த அடக்குமுறையை என்னவென்று சொல்வது? இதையெல்லாம் எதிர்த்துத்தான் நீதிமன்றத்தை நாடப் போகிறேன்...’’
-வெடித்து முடித்தார் சீமான்.

மருது பாண்டியர்கள்
மருது பாண்டியர்கள்
சிவகங்கை ஸமஸ்தானத்திற்குத் தலைவராக ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முன்பு மருத சேர்வைகாரர் என்பவர் இருந்தார். அவருடைய பெருமையையும் நல்லியல்பையும் அறிந்த குடிகளும் வித்துவான்களும் அவரை மருத பாண்டியர் என்று வழங்கிவந்தனர்; மகாராஜாவென்றும் தமக்குட் பேசிக்கொள்வார்கள். அவர் பல வித்துவான்களை ஆதரித்துப் பல வகைப் பரிசுகள் வழங்கினார். தமிழறிவுடையவராதலால், வந்த வித்துவான்களோடு ஸல்லாபம் செய்து சாதுர்யமாக அவர்களுக்கு ஏற்பப் பேசுதலும் அவர்கள் கூறுவன வற்றைக் கேட்டு மகிழ்ந்து உடனுடன் பரிசளிப்பதும் அவருக்கு இயல்பு. அவர்மீது வித்துவான்கள் பாடிய பிரபந்தங்களும், சமயத்திற்கேற்பப் பாடப்பெற்ற பல தனிப்பாடல்களும் அங்கங்கே வழங்கிவருகின்றன. சிறந்த வீரர். அவர் ஆட்சியின் எல்லையில் திருட்டுப்பயம் முதலியன கிடையா. அவருடைய ஆணைக்கு அஞ்சி யாவரும் நடந்து வந்தனர்.
அவர் தெய்வ பக்தி உடையவர். தம் ஆட்சிக்குட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்திகங்கள் விதிப்படி காலத்தில் நடந்துவரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்து வந்தார். பல தலங்களில் அவர் திருப்பணிகள் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவதானமாக நிலங்களை அளித்திருக்கின்றார். முருகக் கடவுள் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள முக்கிய ஸ்தலமாகிய குன்றக்குடியில் திருவீதிக்குத் தென்பாலுள்ள ஒரு தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து படித்துறைகள் கட்டுவித்தனர். அக்குளம் மருதாபுரி என்று அவர் பெயராலேயே வழங்கும். அதனைச் சூழ அவர் வைத்த தென்னமரங்களிற் சில இன்றும் உள்ளன. குன்றக்குடிமலைமேற் சில மண்டபங்களைக் கட்டி யிருக்கின்றனர். அவை கட்டப்பட்ட பொழுது மிக உயர்ந்த சாரங்கள் அமைக்கப் பட்டன. அவற்றில், மேலே உள்ளது மருதபாண்டியரால் அமைக்கப்பட்ட சாரம். கீழ்ச்சாரம் வெங்களப்ப நாயக்கர் என்னும் ஒரு ஜமீன்தாரால் அதற்கு முன் கட்டப்பட்டது. அவற்றைக்குறித்து, “மேலைச்சாரம் எங்களப்பன், கீழைச்சாரம் வெங்களப்பன்” என்னும் பழமொழி ஒன்று அந்தப் பக்கத்தில் வழங்கிவருகிறது.
அக்காலத்தில் ஜனங்கள் மருதபாண்டியரை, ‘எங்களப்பன்” எனச் சொல்லிவந்தனரென்பதனாலேயே அவருடைய உத்தமகுணங்க்ளும் அவர் பால் இருந்த அன்பும் புலப்படும். காளையார் கோவிலிலுள்ள மிகப் பெரிதான யானைமடு என்னும் தீர்த்தத்தைச் செப்பஞ்செய்து நாற்புறமும் படித்துறை கட்டுவித்தார். அந்த ஸ்தலத்தில் கோபுரமும் கட்டுவித்தார். அப்பொழுது மிக்க தூரத்திலிருந்து செங்கற்கள் வரவேண்டி யிருந்தன. அதற்காக வழி முழுவதும் சில அடிகளுக்கு ஒவ்வொரு மனிதராக நிற்க வைத்து ஒருவர் கை மாற்றி ஒருவர் கையிற் கொடுக்கும்வண்ணம் செய்து செங்கற்களை வரவழைத்தனர். அவ்வாறு மாற்றுபவர்களுக்கு அவல் கடலை முதலிய உணவுகளையும் தண்ணீரையும் அடிக்கடி கொடுத்து அவர்களுக்குக் களைப்புத் தோன்றாமல் செய்வித்தார்.
காளையார் கோவிலுக்குத் தேர் ஒன்று மிகப் பெரியதாக அமைக்கவேண்டுமென்று அவர் கருதித் தக்க சிற்பிகளை வருவித்து வேண்டியவற்றை யெல்லாம் சேகரித்து முடித்தா. அத்தேரின் அச்சுக்கு ஏற்றதாக ஒரு பெரிய மரம் கிடைக்கவில்லை. பல இடங்களுக்குச் செய்தி அனுப்பி விசாரித்து வந்தார். அப்பொழுது அவருடைய ஆட்சிக்குட்பட்ட திருப்பூவணத்தில் வையை ஆற்றிற்குத் தென்கரையில் ஆலயத்துக்கு எதிரில் மிகப் பழையதும், பெரியதுமாக மருதமரம் ஒன்று இருப்பதாக அறிந்தார். அதனை அச்சுக்கு உபயோகப் படுத்தலாமென்றெண்ணி, உடனே அதனை வெட்டி அனுப்பும்படி அங்கே உள்ள அதிகாரி களுக்கு உத்தரவு அனுப்பினார்.
அதனைப் பெற்ற அதிகாரிகள், அவ்வாறே செய்ய நினைந்து வேண்டிய வேலையாட்களை ஆயுதங்களுடன் வருவித்து மரத்தை வெட்டத் தொடங்கினார்கள். அப்பொழுது, அதனைக் கேள்வியுற்று அத்தலத்தில் திருப்பூவணநாதருக்குப் பூசை செய்து வருபவர்களுள் ஒருவராகிய புஷ்பவனக் குருக்களென்னும் பெரியோர், “அந்த மரத்தை வெட்டக் கூடாது” என்று ஓடிவந்து தடுத்தார். “ராஜாக் கினைக்கு மேலேயோ உம்முடைய ஆக்கினை?” என்று சொல்லிவிட்டு அதிகாரிகள் அதனை வெட்டும்படி வேலைக்காரர்களை ஏவினார்கள். அதைக் கண்ட குருக்கள் ஆத்திரம் மிக்கவராகி, “மகாராஜா மேல் ஆணை! நீங்கள் இந்த மரத்தை வெட்டக் கூடாது!” என்று மீட்டும் தடுத்தார். அவ்வாறு ஆணையிட்டு மறித்ததனால் அவர்கள் அஞ்சி வெட்டுதலை நிறுத்திவிட்டு உடனே அச்செய்தியை மருத பாண்டியருக்குத் தெரிவித்தார்கள்.
அதனை அறிந்த மருத பாண்டியர், “ஸ்ரீ காளீசுவரருடைய திருத்தேருக்காக நாம் வெட்டச் சொல்லி யிருக்கும்பொழுது அதைத் தடுக்கலாமோ? அவ்வளவு தைரியத்தோடு தடுத்ததற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்?? நாமே நேரிற் போய் இதை விசாரித்து வர வேண்டும்” என்றெண்ணித் தமது பரிவா ரங்களுடன் சென்று திருக்கோயில் வாயிலில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்கினார். கோவில் அதிகாரிகள் மரியாதைகளோடு வந்து அவரைக் கண்டனர். பாண்டியர் விபூதி குங்குமப் பிரஸாதங்களைப் பெற்று அணிந்து கொண்டார்.
அப்பால், “கோயிற் காரியங்கள் குறைவின்றி நடந்து வருகின்றனவா?” என்று விசாரித்தார். பின்பு, அவர்களை நோக்கி, ” இங்கே உள்ள குருக்களில் ஒருவர், வையைக் கரையிலுள்ள மரத்தை வெட்டக் கூடாதென்று தடுத்ததாகக் கேள்விப் பட்டோம். நம்முடைய கட்டளையைத் தடுத்த அவர் யார்? இப்பொழுது அவர் எங்கே உள்ளார்?” என்று கேட்டார். அவர்கள், “இதோ, இப்பொழுதுதான் மகாராஜா அவர்களுக்குப் பிரஸாதங்கள் கொடுத்துவிட்டு அவ்விடத்துக்கு அஞ்சி மதுரைக்குப் போய்விட்டார். இவ்வளவு நேரத்திற்குள் வெகு தூரம் போயிருப்பார்.” என்று நடுநடுங்கிச் சொன்னார்கள்.
புஷ்பவனக்குருக்கள், தாம் செய்த செயலால் தமக்கு என்ன துன்பம் வருமோ வென்றஞ்சி, மருத பாண்டியருடைய அதிகாரத்துக்குட்படாத இடத்திற்குப் போகவேண்டுமென்று கருதி, முன்னரே ஸித்தம் செய்து வைத்திருந்த வண்டியில் ஏறி, மதுரை போய்ச் சேர்ந்துவிட்டார்.
மருத பாண்டியர், உடனே மதுரைக்குச் சென்ற குருக்களுக்கு ஓரபய நிருபம் எழுதுவித்து அதைக் காட்டி அவரை அழைத்துவரும்படி ஒருவரை அனுப்பினா. அபயநிருபம் என்பது, பழைய காலத்தில் குற்றவாளி களுக்கேனும், அஞ்சி ஓடி ஒளித்த பகைவர்களுக்கேனும், “நீங்கள் அஞ்ச வேண்டாம்; இங்கே வந்தால் உங்களுக்கு ஒரு துன்பமும் நேராது” என்று அரசர்களால் அவர்களுக்குள்ள பயத்தைப்போக்குவதற்காக எழுதப் படுவது.
அந்நிருபத்தைப் பெற்ற புஷ்பவனக்குருக்கள் திருப்பூவணம் வந்து மருதபாண்டியர் முன்னே நடுக்கத்தோடு நின்றார். பாண்டியர் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொண்டு அவரை இருக்கச் சொல்லி, “நீர்தாம் அந்த மரத்தை வெட்டக் கூடாது என்று சொன்னவரோ?” என்று கேட்டார்.
குருக்கள்: ஆமாம், மகாராஜா!
பாண்டியர்: காளையார் கோயில் தேருக்கு உபயோகித்தற்காக நாம் அதை வெட்டச் சொல்லியிருக்கும்போது நீர் தடுக்கலாமா??
குருக்கள்: அதற்குத் தக்க காரணங்கள் இருந்தமையால்தான் அப்படிச் செய்தேன்.
உடனிருந்த அதிகாரிகளும் ஊராரும் பிறரும் மருத பாண்டியர் குருக்களை என்ன செய்து விடுவாரோ வென்றும் குருக்கள் தாம் செய்த குற்றத்திற்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறாரோவென்றும் அஞ்சி அவ்விருவர்களுக்கும் இடையே நடந்த சம்பாஷணையை ஆவலோடு கவனித்து வந்தார்கள்.
பாண்டியர்: என்ன காரணங்கள் இருக்கின்றன? அஞ்சாமற் சொல்லும்.
குருக்கள்: இந்த ஸ்தலம் மிகவும் சிறந்தது; பழமையானது; மதுரைச் சுந்தரேசுவரர் பொன்னணை யாளுக்காக இரசவாதம் செய்த இடம். இறந்து போன ஒருவனுடைய எலும்பு இத்தலத்தில் வையை யாற்றிற் போட்ட பொழுது புஷ்பமாக ஆயிற்று. அதனால் இது புஷ்பவன காசி என்று பெயர் பெறும். இந்த ஸ்தலத்தை மிதிக்க அஞ்சி நாயன்மார் மூவரும் வையைக்கு வடகரையிலேயே இருந்து தரிசனம் செய்து கொண்டு சென்றார்கள். அதற்கு அறிகுறியாக வடகரையில் அம்மூவர்களுக்கும் ஆலயம் உண்டு. இவை போன்ற பெருமைகளால் ஒரு யாத்திரை ஸ்தலமாகவே இவ்வூர் இருந்து வருகிறது. அயலூரிலிருந்து எவ்வளவோ ஜனங்கள் நாள்தோறும் வந்து வந்து வையையில் ஸ்நானம் செய்து ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்லுகிறார்கள். வையையில் எப்பொழுதும் நிறைய ஜலம் ஓடுவதில்லை. கோடைக் காலத்தில் வடகரை ஓரமாகத் தான் கொஞ்சம் ஜலம் ஓடும். அப்பொழுது அங்கே சென்று ஸ்நானம் செய்து வருபவர்கள் மணலில் நடந்து துன்பமுற்று வெயிலின் கொடுமையை ஆற்றிக் கொள்வதற்கு இந்த மருத மரத்தின் கீழிருந்து இளைப்பாறிவிட்டுச் செல்வது வழக்கம். இந்த மரம் எவ்வளவோ நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. நூற்றுக்கணக்கான ஜனங்கள் நிழலுக்காக இதன் கீழ் இருக்கலாம்.
மருத பாண்டியர், இங்ஙனம் குருக்கள் கூறும் காரணங்களைக் கேட்டுக் கொண்டே வந்தார்; அவை பொது ஜனங்களின் நன்மையைக் கருதியவை என்பதை அறிய அறிய அவருடைய கோபம் சிறிது சிறிதாகத் தணிந்துகொண்டே வந்தது. பின்னும் கூர்ந்து கேட்கலாயினர்.
“மகாராஜாவுக்கு, இந்த மரத்தினால் ஜனங்களடையும் பெரும் பயன் தெரிந்திருந்தால் இப்படிக் கட்டளை பிறந்திராது என்று எண்ணினேன். இந்த மரத்தை வெட்டிவிட்டால், அயலூர்களிலிருந்து, பிரார்த்தனை களைச் செலுத்தும்பொருட்டு, ஸ்நாநம் செய்துவிட்டுவரும் கர்ப்ப ஸ்திரீகளும், குழந்தைகளோடும் பிராயம் முதிர்ந்தவர்களோடும் வரும் பக்தர்களும், பிறரும் வெயிற்காலத்தில் மிக்க துன்பத்தை அடைவார்கள். அக்கரையிலிருந்து வருபவர்களும் வெயிலில் வந்த இளைப்பை ஆற்றிக் கொள்ள இடமில்லாமல் தவிப்பார்கள். மகாராஜா நினைத்தால் இந்த ஸமஸ்தானத்தில் எவ்வளவோ மரங்கள் கிடைக்கக் கூடும். இந்த ஒரு மரந்தான் இருக்கிறதென்பதில்லை, இந்த மரத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் எனக்கு மகாராஜாவின் ஞாபகம் வரும். இது பல ஜனங்களுடைய தாபத்தைப்போக்கி அவர்களுள்ளங் குளிரச் செய்து நிழலளித்து மகாராஜாவைப் போல் விளங்கிவருகின்றது. அன்றியும் மற்றொரு முக்கியமான விஷயந்தான் என்னுடைய மனத்தில் அதிகமாகப் பதிந்திருக்கின்றது. இந்த அருமையான மரம் மகாராஜாவுடைய பெயரைத் தாங்கிக்கொண்டு நிற்கின்றது. இந்த மரம் நெடுங்காலம் இருக்கவேண்டுமென்பதே, மகாராஜாவின் க்ஷேமத்தையே குறித்து ஸந்நிதியில் அர்ச்சனை செய்துவரும் எனது பிரார்த்தனை. இதை வெட்டலாமா?” என்று கூறிக் குருக்கள் நிறுத்தினார்.
பக்கத்தில் நின்ற யாவரும் தம்மையே மறந்து, “ஹா!ஹா!” என்று தங்கள் உணர்ச்சியை வெளிப் படுத்தினார்கள். “மகாராஜாவினுடைய பெயரைத் தாங்கிக் கொண்டு இது நிற்கின்றது” என்று சமயோசிதமாக அவர் சொல்லிய வாக்கியமானது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் உருக்கத்தையும் உண்டாக்கிவிட்டது.
பராமுகமாகக் கேட்டுக் கொண்டு வந்த மருத பாண்டியர் முகமலர்ந்து நிமிர்ந்து குருக்களைப் பார்த்தார். அவருடைய உள்ளம் குருக்களுடைய நல்லெண்ணத்தை அறிந்து கொண்டது. உண்மையான அன்பே அவரை அவ்வாறு தடுக்கச் செய்ததென்பதை அவர் உணர்ந்து, “சரி; நீர் செய்தது சரியே! உமக்கு நம் மேல் உள்ள விசுவாசத்தையும் பொது ஜனங்களின் மேல் உள்ள அன்பையும் கண்டு சந்தோஷிக்கிறோம்.” என்று கூறினார்.
மருத மரம் வெட்டப்படாமல் நின்றது. குருக்கள் அச்சம் நீங்கினார். காளையார் கோயில் தேருக்கு வேறொரு மரம் அச்சு ஆயிற்று
இந்த நிலை மாறுவது எப்போது?
இந்த நிலை மாறுவது எப்போது?
January 15-2011
1. அரிசியின் விலை கிலோ 44 ரூபாய். ஆனால் சிம் கார்டு இலவசமாகக் கிடைக்கிறது.
2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்.
3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்.
4. பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகத்தில்கூட அதாவது பாதி நேரத்தில்கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை!
5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அறப் பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை!
6. நாம் அணியும் உள்ளாடைகளும், ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பெற்ற கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக் கடைகளில் விற்கப்படுகின்றன.
7. நாம் குடிக்கும் லெமன் ஜீஸ்கள் செயற்கையான இரசாயனப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான லெமனில் (எழுமிச்சையில்) தயாரிக்கப்படுகிறது.
8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்துவிற்றால் வரியில்லை அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்துவிற்றால் வரி உண்டு!
10. பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை!
11. குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டுவந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்!
இந்த நிலை மாறுவது எப்போது? …………
தூங்கும் பாரதமாதாவைதான் எழுப்பிக் கேட்க வேண்டும்!
Jan 11, 2011
SUJATHA-short stories
hello friends who are interested in sujatha stories
Subscribe to:
Posts (Atom)